பட்டதாரியிடம் ரூ.19 லட்சம் மோசடி

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மோசடி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 29). எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு சேலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (30) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இந்த நிலையில் ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாக சந்தோஷ்குமார் அவரிடம் கூறியுள்ளார்.
இதை நம்பி சந்தோஷ் ரூ.19 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து சந்தோசுக்கு போலியான பணி நியமன ஆணையை சந்தோஷ்குமார் வழங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் இந்த மோசடி குறித்து தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
3 பேர் மீது வழக்குப்பதிவு
இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமார், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ராஜ்குமார், நந்தகுமார் ஆகிய 3 பேர் மீது தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






