இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி


இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 3 Feb 2023 6:46 PM GMT)

கிப்ட் வவுச்சர் இருப்பதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

கிப்ட் வவுச்சர் இருப்பதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிப்ட் வவுச்சர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ஏனுசோனை பக்கமுள்ள மேசிகம்பட்டியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 28). இவர் இணையதளம் மூலம் பொருட்களை வாங்கி வந்தார். கடந்த 29.12.2022 அன்று இவருக்கு ஒரு தபால் வந்தது. அதில் தனியார் நிறுவனம் மூலம் கார்டு கூப்பன் அதில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு மல்லிகா பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் தொகைக்கு நீங்கள் பொருட்கள் பெற தொகை மற்றும் நடைமுறை செலவுகள் கட்ட வேண்டும் என்று கூறினார்.

ரூ.5.22 லட்சம் மோசடி

இதையடுத்து, மல்லிகா, அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு, ரூ.5 லட்சத்து 22 ஆயிரம் தொகையை அனுப்பினார்.அதன் பிறகு அந்த நபர் மல்லிகாவுடன் பேசுவதை தவிர்த்து விட்டார். மேலும் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால்பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து மல்லிகா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story