வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.3½ லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
காரைக்குடி,
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
வெளிநாட்டு வேலை
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 25). இவர் சிங்கப்பூரில் வேலை பெறுவதற்காக காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்த ஏஜெண்டு வைரவ பாலன் என்பவரிடம் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்தை கொடுத்தார்.
இந்த பணத்தை பெற்றுக்கொண்டு சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக உத்தரவாதம் அளித்த வைரவபாலன், தான் கூறியபடி ராமச்சந்திரனுக்கு நீண்ட நாட்களாக வேலை வாய்ப்பு குறித்த எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
போலீசில் புகார்
இதைத்தொடர்ந்து ராமச்சந்திரன் எனக்கு வேலை வேண்டாம். பணத்தை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு வைரவபாலன் பொய்யான காரணங்களைக்கூறி பணத்தை கொடுக்காமல் நீண்ட காலம் ஏமாற்றி வந்துள்ளார். பின்னர் இதுகுறித்து ராமச்சந்திரன் காரைக்குடி அழகப்பாபுரம் போலீசில் புகார் செய்துள்ளார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் வழக்கு பதிவு செய்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வைரவ பாலனை தேடி வருகிறார்.