அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 பேரிடம் ரூ.21 லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 பேரிடம் ரூ.21 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 பேரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்து போலி நியமன ஆணை வழங்கிய பெண் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

சிவகங்கை


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 பேரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்து போலி நியமன ஆணை வழங்கிய பெண் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

ரூ.21 லட்சம் மோசடி

சிவகங்கை தொண்டி ரோடு பகுதியில் வசிப்பவர் ராஜேஸ்வரி (வயது 45). இவர் சிவகங்கை காளவாசல் பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் சிவகங்கை சேர்ந்த மருதுபாண்டி, முத்துப்பாண்டி, முத்து உமையாள் ஆகிய 5 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.21 லட்சம் பெற்றுக் கொண்டாராம்.

அதன் பின்னர் அவர்கள் 5 பேருக்கும் பணி நியமன ஆணைகளையும் கொடுத்தாராம். அதைப் பெற்றுக் கொண்ட அவர்கள் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்த அலுவலகத்தில் பணிக்கு சேர சென்ற போது அந்த உத்தரவு போலியானது என்று தெரிந்ததாம்.

போலீசில் புகார்

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் ராஜேஸ்வரி மீது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் விசாரணை நடத்தி ராஜேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.


Related Tags :
Next Story