பட்டறைகளில் 2 கிலோ நகை வாங்கி மோசடி


பட்டறைகளில் 2 கிலோ நகை வாங்கி மோசடி
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பட்டறைகளில் 2 கிலோ நகை வாங்கி மோசடி

கோயம்புத்தூர்

கோவை

கடைகளில் விற்பனை செய்து தருவதாக கூறி பட்டறைகளில் 2 கிலோ நகையை வாங்கி மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகை விற்பனை

கோவை செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்தவர் தீபக் (வயது 32). இவருடைய மனைவி வர்ஷினி (27). இவர்கள் 2 பேரும் கோவையில் உள்ள நகைப்பட்டறையில் தயாரிக்கும் தங்க நகைகளை வாங்கி கடைகளில் விற்பனை செய்து கொடுப்பது வழக்கம். இதற்கு தனியாக அவர்கள் கமிஷன் பெறுவதுண்டு.

இந்த நிலையில் இந்த தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 10-ந் தேதி வரை கடைவீதி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நகைப்பட்டறையில் 2 கிலோ 51 கிராம் நகைகளை விற்பனை செய்து தருவதாக வாங்கி இருந்தனர்.

2 கிலோ நகை மோசடி

ஆனால் அந்த நகைகளை விற்று அதற்கான பணத்தை உரிய நபர்களிடம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக நகை பட்டறை உரிமையாளர்கள் தீபக்-வர்ஷினி தம்பதியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் சரியான பதிலை தெரிவிக்கவில்லை.

அப்போதுதான் 2 பேரும் சேர்ந்து விற்பனை செய்து தருகிறேன் என்று வாங்கிச்சென்ற 2 கிலோ 51 கிராம் நகையை மோசடி செய்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட நகை உரிமையாளர்கள் பெரியக்கடை வீதி போலீசில் புகார் செய்தனர்.

தம்பதி கைது

அதன்பேரில் போலீசார் தீபக்-வர்ஷினி ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story