வீட்டுமனை தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி
வீட்டுமனை தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை
வாலாஜாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் தவணை முறையில் மாதந்தோறும் 1,100 ரூபாய் கட்டினால் இறுதியில் வீட்டுமனை வழங்கப்படும் என்ற கவர்ச்சியான திட்டத்தை கூறி மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, கல்மேல்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கானவர்களிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பி ஏராளமானோர் மாதந்தோறும் 1,100 ரூபாய் வீதம் 55 மாதங்கள் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் தவணைக்காலம் முடிந்து பல வருடங்களாகியும் தற்போது வரை வீட்டு மனை வழங்கப்படவில்லை. பணம் கட்டியவர்கள் சென்று கேட்கும்போது உரிய பதிலளிக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால், பணம் கட்டி ஏமாந்தவர்களில் சிலர் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story