2 லாரிகள்-டிராக்டரை வாடகைக்கு எடுத்து மோசடி


2 லாரிகள்-டிராக்டரை வாடகைக்கு எடுத்து மோசடி
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே 2 லாரிகள், டிராக்டரை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த அமுல் பபியோன்ராஜ் என்பவரின் மனைவி செலின்ரோஸ். நேற்று இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனக்கு சொந்தமாக 2 டிப்பர் லாரிகள், ஒரு டிராக்டர் உள்ளன. இவற்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணப்பாறையை சேர்ந்த ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்தேன்.


ஆனால் அவர் முறையாக வாடகை தரவில்லை. இதனால் லாரிகள் மற்றும் டிராக்டரை பார்க்க வேண்டும் என்று கேட்ட போது, அவற்றை மற்றொரு நபரிடம் கொடுத்தது தெரியவந்தது. இதற்கிடையே அவர் வாகனங்களை வாடகைக்கு வாங்கி, மோசடியாக விற்பனை செய்பவர் என்பது தெரியவந்துள்ளது. எனவே என்னுடைய 2 லாரிகள் மற்றும் டிராக்டரை மீட்டு தரவேண்டும். மேலும் வாடகை தராமல் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.





Next Story