வழக்கறிஞர் பெயரில் போலி சீல் தயாரித்து மோசடி
திருப்பத்தூரில் வழக்கறிஞர் பெயரில் போலி சீல் தயாரித்து மோசடி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை பிரதான சாலையை சேர்ந்தவர் வெங்கடாசலபதி. வழக்கறிஞரான இவர் நோட்டரி பப்ளிக் ஆவார். இவரது பெயரில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களான சுரேஷ், அன்பரசன் மற்றும் செந்தில்குமார் ஆகிய 3 பேரும் போலி சீல் தயாரித்து தடையில்லா சான்று வழங்கி உள்ளனர்.
இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசில் வெங்கடாஜலபதி புகார் செய்தார். அதன்பேரில் சுரேஷ், அன்பரசன், செந்தில்குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story