போலி ஆவணம் தயாரித்து மோசடி; ரூ.1¼ கோடி நிலம் மீட்பு


போலி ஆவணம் தயாரித்து மோசடி; ரூ.1¼ கோடி நிலம் மீட்பு
x

மூன்றடைப்பு பகுதியில் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்யப்பட்ட ரூ.1¼ கோடி நிலம் மீட்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை:

மூன்றடைப்பு பகுதியை சேர்ந்த பார்வதி என்பவருக்கு சொந்தமாக மூன்றடைப்பில் 2½ ஏக்கர் நிலம் உள்ளது. பார்வதி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில், பார்வதியின் வீட்டில் இருந்த அசல் ஆவணத்தை வேலு என்பவர் எடுத்துச் சென்றும், வேலுவின் தாயார் கனியம்மாள் போட்டோவை ஒட்டி, பார்வதி பெயரில் போலியான ஆதார் கார்டு தயார் செய்து, சொத்தை வேலுவின் மனைவி வெண்ணிலாபாரதிக்கு போலியான செட்டில்மென்ட் ஆவணம் தயார் செய்து நிலத்தை அபகரித்தும், அந்த நிலத்தின் போலி ஆவணத்தை வைத்து, வங்கியில் ரூ.50 லட்சம் கடன் பெற்றுள்ளார்கள்.

இதனை அறிந்த பார்வதி மகன் சிவசக்திவேல் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தார். மனுவை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மீராள்பானு விசாரணை நடத்தி வந்த நிலையில், போலி ஆவணம் மூலம் வங்கியில் பெற்ற ரூ.50 லட்சம் கடனை வங்கியில் திரும்ப செலுத்தியுள்ளனர். விசாரணைக்கு பின் சிவசக்திவேல் மற்றும் அவரது உடன்பிறந்தோருக்கு சொந்தமான ரூ.1¼ கோடி மதிப்பிலான 2½ ஏக்கர் நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நில உரிமையாளரிடம் வழங்கினார்.


Next Story