கார் ஆவணங்களை திருடி மோசடி


கார் ஆவணங்களை திருடி மோசடி
x

கோவையில் கார் ஆவணங்களை திருடி மோசடி செய்த டிரைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை,

கோவை பீளமேடு விமான நிலையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன் (வயது 58). பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், சென்னையை சேர்ந்த முகமது ரியாஸ் என்பவரிடம் இருந்து விலைமதிப்புள்ள சொகுசுகாரை வாங்கி இருந்தார். இந்த நிலையில், அவரிடம் டிரைவராக வேலை பார்த்த பிரதீப் என்பவர், கார் சாவி மற்றும் ஆர்.சி., புத்தகத்தை திருடிவிட்டு ஆர்.சி., புத்தகத்தை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து கடன் வாங்கி உள்ளார்.

அத்துடன், கார் உரிமையாளர் போல ஆள் மாறாட்டம் செய்து கையெழுத்திட்டு, கார் ஆர்.சி., புத்தகத்தை ரமேஷ் என்பவர் பெயருக்கு மாற்றிக் கொடுத்து விட்டார். கார், மதுசூதனன் வசம் இருந்தாலும், அதன் உரிமை வேறு ஒருவர் வசம் மாறி விட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மதுசூதனன் கொடுத்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார், பிரதீப் மற்றும் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 பேரையும் தேடி வருகிறார்கள்.


Next Story