நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி ரூ.7.40 லட்சம் கொடுக்காமல் மோசடி


நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி ரூ.7.40 லட்சம் கொடுக்காமல் மோசடி
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி ரூ.7.40 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

கோவையில் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி ரூ.7.40 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நிதி நிறுவன மேலாளர்

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் பத்மநாதன் (வயது 55).

இவர் அங்குள்ள ஒரு நிதி நிறுவனத்தில் மேலாள ராக வேலை செய்து வருகிறார். இவர் தனது நிறுவனம் சார்பில் விருது வழங்கும் விழாவை கோவையில் நடத்த முடிவு செய்தார்.

இதற்காக அவர் கடந்த மாதம் 14-ந் தேதி பீளமேடு நவ இந்தியா பகுதியில் உள்ள ரேடிசன்புளு என்ற நட்சத்திர ஓட்டலில் தங்கும் அறை மற்றும் விழா நடத்தும் ஹால் ஆகியவற்றை முன்பதிவு செய்தார்.

காசோலை திரும்பியது

அதன்படி அங்கு விழா நடைபெற்று முடிவடைந்தும் 20 நாட்களாக அறையை காலி செய்யாமல் தங்கி இருந்து உள்ளார்.

இதையடுத்து அவர் நேற்று முன்தினம் அறையை காலி செய்யப்போவதாக ஓட்டல் ஊழியர்களிடம் கூறினார்.அதற்கு அவர்கள், ரூ.8 லட்சத்து 59 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அந்த தொகைகக்கு பத்மநாதன் காசோலை கொடுத்து உள்ளார். ஆனால் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி விட்டது.

கைது

இது பற்றி ஓட்டல் ஊழியர்கள் கேட்ட போது பத்மநாதன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கப்பணமாக கொடுத்து உள்ளார். மீதி பணம் ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்தை பிறகு தருவதாக கூறி உள்ளார்.

ஆனால் ஓட்டல் நிர்வாகத்தினர் முழுதொகையையும் செலுத்த வேண்டும் என்று கேட்டு உள்ளனர். இதனால் அவர்கள் இடை யே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப் போது பத்மநாதன், ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்து பணம் செலுத்த மறுத்து கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இது குறித்து ஓட்டல் மேலாளர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் நம்பிக்கை மோசடி, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நிதி நிறுவன மேலாளர் பத்மநாதனை கைது செய்தார்.


Next Story