நிலத்துக்கு பணம் பெற்று பத்திரப்பதிவு செய்யாமல் மோசடி; விவசாயி மீது வழக்கு
திசையன்விளை அருகே நிலத்துக்கு பணம் பெற்று பத்திரப்பதிவு செய்யாமல் மோசடி செய்ததாக விவசாயி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை அருகே உவரி யாதவர் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 56). இவர் அதே ஊரைச் சேர்ந்த காளத்திநாதன் என்பவர் மூலம் குட்டத்தை சேர்ந்த விவசாயி சிவசுப்பிரமணிய மார்த்தாண்டம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை ரூ.16 லட்சத்து 100-க்கு விலைபேசி முழுத்தொகையையும் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட சிவசுப்பிரமணிய மார்த்தாண்டம் பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக உவரி போலீசில் ராஜகோபால் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story