தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் தொகை தருவதாக கூறிபெண் என்ஜினீயரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி


தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் தொகை தருவதாக கூறிபெண் என்ஜினீயரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் தொகை தருவதாக கூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம்


விழுப்புரம் வண்டிமேடு விராட்டிக்குப்பம் பாதை பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகள் ரேவதி(வயது 27). என்ஜினீயர். இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி, இவரது செல்போனுக்கு ஒரு டெலிகிராம் ஐ.டி.யில் இருந்து குறுந்தகவல் வந்தது.

அதில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் சொல்லும் வங்கிக்கணக்கிற்கு ரூ.8 ஆயிரத்து 999 அனுப்பி வைத்தால், ஆன்லைன் மூலமாக தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து 3 மணி நேரத்திற்குள் 95 ஆயிரம் ரூபாய், லாபமாக பெறலாம் என கூறியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய ரேவதி, அவர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார். அதற்கு ரூ.1.46 லட்சம் ரூபாய் நீங்கள் வென்றுள்ளதாக குறுந்தகவலை அனுப்பி வைத்துள்ளனர்.

மோசடி

அந்த தொகையை நீங்கள் பெறுவதற்கு, 15 சதவீதம் கமிஷன் செலுத்த வேண்டும் எனவும், நீங்கள் கட்டும் தொகை முழுமையாக பின்னர் திருப்பி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இதை நம்பிய ரேவதி, கடந்த 31-ந்தேதி முதல் நேற்று முன்திம் வரைக்கும் அவர்கள் குறிப்பிட்ட டெலிகிராம்ஐ.டி. மூலம், ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 135 தொகையை, 7 தவணைகளில் முதலீடு செய்து அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், அந்த நபர்கள் பணத்தை திருப்பி தரவில்லை. இதன் பின்னர் தான், தன்னை அவர்கள் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது ரேவதிக்கு தெரியவந்தது.

இதுகுறித்து ரேவதி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து, ரூ.1.82 லட்சம் பணத்தை மோசடி செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story