பான் கார்டை புதுப்பித்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி - லிங்க்கை கிளிக் செய்ததால் விபரீதம்

பான் கார்டை புதுப்பித்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி - லிங்க்கை கிளிக் செய்ததால் விபரீதம்
x

சென்னையில் பான் கார்டை புதுப்பித்து தருவதாக கூறி 10 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை,

சென்னையில் பான் கார்டை புதுப்பித்து தருவதாக கூறி 10 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் பத்ரி நாராயணன். இவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தனது தாயை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளார். இதனிடையே, ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்ற போது, இருமுறை ஏடிஎம்மின் நம்பரை தவறாக பதிவிட்டதால் கார்டு பிளாக் ஆகியதாக தெரிகிறது.

இந்த நிலையில், வீட்டிற்கு திரும்பிய பத்ரி நாராயணனை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தங்களது பான் கார்டு காலாவதி ஆகிவிட்டதால் ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டது என்றும், பான்கார்டை புதுப்பித்தால் ஏடிஎம் கார்டு மீண்டும் வேலை செய்யும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து பான் கார்டை புதுப்பிப்பதற்கு அந்த நபர் அனுப்பிய லிங்கை பத்ரி கிளிக் செய்தபோது கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பத்ரி போலீசில் புகாரளித்தார். இதனடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story