போலி நியமன ஆணை வழங்கி ரூ.12 லட்சம் மோசடி
போலி நியமன ஆணை வழங்கி ரூ.12 லட்சம் மோசடி
மதுரை மாவட்டம் சோழவந்தான் முள்ளிப்பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 25). இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். இதை அறிந்த திருமங்கலத்தை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன், தனசேகரன், வைரவஜெயபாண்டி, சென்னை மணிபாரதி ஆகியோர் ஆவினில் நிரந்த வேலை வாங்கி தருவதாக கூறினார்கள். மேலும் அதற்கு ரூ.12 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்தனர். அதை தொடர்ந்து அருணாச்சலம் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்தார். பணத்தை பெற்று கொண்ட அவர்கள் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு வைத்து ஆவின் வேலைக்கான பணி நியமன ஆணையை கொடுத்தனர். அதனை பெற்று கொண்டு அவர் ஆவின் நிறுவனத்தில் சென்று கேட்ட போது அது போலி பணி நியமன ஆணை என்று தெரிவித்தனர். பின்னர் அருணாச்சலம் இது குறித்து தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் அவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.