போலி விசா வழங்கி ரூ.12 லட்சம் மோசடி


போலி விசா வழங்கி ரூ.12 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 7 Jun 2023 12:30 AM IST (Updated: 7 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

போலி விசா வழங்கி ரூ.12 லட்சம் மோசடி

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் இருந்து இலங்கை செல்ல போலி விசா வழங்கி மில் தொழிலாளியிடம் ரூ.12 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசில் கூறியதாவது:-

போலி விசா

இலங்கையை சேர்ந்த பிரேமரத்னா என்பவரது மகன் மங்கலநிசாந்தா (வயது 48). இவர் திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த 2021-ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம், வடகோவையில் தனியார் ஏஜென்சி நடத்தி வந்த ஜஷ்வா (வயது34) என்பவரிடம், தனக்கும், உறவினர்களுக்கும் விசா ஏற்பாடு செய்து தர வேண்டும் என கேட்டார். இதற்காக அவர் ஆவணங்களையும் சமர்ப்பித்து இருந்தார்.

அப்போது விசா பெறுவதற்கு ரூ.11 லட்சத்துக்கும் மேல் செலவாகும் என்று ஜஷ்வா கூறினார். எனவே மங்கல நிசாந்தா மற்றும் உறவினர்கள் ஜஷ்வாவின் வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளாக ரூ.11 லட்சத்து 71 ஆயிரத்து 466 செலுத்தி உள்ளனர்.

அதன்பிறகு அவர்களுக்கு விசா தரப்பட்டது. இந்த நிலையில் மங்கலநிசாந்தாவின் உறவினர் அமரசிங்கே அரசிலேகே அந்த விசா மூலம் இலங்கை சென்றார்.

இலங்கை சிறையில் அடைப்பு

அப்போது கொழும்பு விமானநிலைய அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். இதில் அது போலி விசா என்பது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த மங்கலநிசாந்தா, ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் ஏஜென்சி உரிமையாளர் ஜஷ்வா, மற்றொரு மோசடி வழக்கில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு கைதாகி சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் இந்த மோசடி குறித்தும் ஜஷ்வாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story