அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 68 பேரிடம் ரூ.2 கோடி மோசடி


அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 68 பேரிடம் ரூ.2 கோடி மோசடி
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 68 பேரிடம் ரூ.2 கோடியே 17 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 68 பேரிடம் ரூ.2 கோடியே 17 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

அரசு வேலை

கோவை கவுண்டம்பாளையம், லட்சுமி நகரை சேர்ந்தவர் ஆத்மா சிவக்குமார் (வயது 53). அ.தி.மு.க. முன்னாள் பிரமுகரான இவர் வ.உ.சி. பேரவையின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அமைச்சர்களுடன் தனக்கு நெருக் கம் இருப்பதாகவும், அவர்களிடம் கூறி அரசு வேலை வாங்கித் தர முடியும் என்று பட்டதாரிகள் உள்பட பலரிடம் கூறியதாக தெரிகிறது.

அந்த வகையில் அரசு போக்குவரத்து துறை, வருவாய், வேளாண் மை, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்வேறு கட்ட வேலைகளை வாங்கித் தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வாங்கி உள்ளார்.

ரூ.2 கோடி மோசடி

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாரிசாமி என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரில், தனக்கு கிராம நிர்வாக அதிகாரி வேலை வாங்கித் தருவதாக கூறி ஆத்மா சிவக்குமார் ரூ.8 லட்சம் மோசடி செய்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 68 பேரிடம் ஆத்மா சிவக்குமார் ரூ.2 கோடியே 17 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

கைது

இந்த மோசடி தொடர்பாக ஆத்மா சிவக்குமார், அவருடைய உறவினர்களான சத்யபாமா, மணிகண்டன், ஜெயகிருஷ்ணன், சுப்பிரமணி ஆகிய 5 பேர் மீது மோசடி, கூட்டுசதி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்தார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக அவர்களை போலீசார் தேடி வந்தனர். இதில் பல மாதங்களாக தலைமறைவாக இருந்த ஆத்மா சிவக்குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

சொத்து பறிமுதல்

ஆத்மா சிவக்குமார் மோசடியாக சம்பாதித்த பணத்தில் துடிய லூர் லூனா நகர் பகுதியில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டது தெரிய வந்தது. எனவே மோசடி பணத்தில் வாங்கிய சொத்து களை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மோசடியில் தொடர்புடைய சுப்பிரமணி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story