பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி
பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் ஒச்சந்தட்டு சந்தை பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய தீபா(வயது 25). இவர் இன்ஸ்டாகிராமை பார்க்கும்போது அதில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து முதலில் ரூ.3 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். அதற்கு இரட்டிப்பு தொகை கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர் 10 தவணைகளில் ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 932 அனுப்பி உள்ளார். ஆனால் பணத்தை பெற்று கொண்டவர்கள் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டார்களாம். இது குறித்து ஆரோக்கிய தீபா சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story