ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி கராத்தே மாஸ்டரிடம் ரூ.21¼ லட்சம் மோசடி


ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி கராத்தே மாஸ்டரிடம் ரூ.21¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி கராத்தே மாஸ்டரிடம் ரூ.21¼ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோயம்புத்தூர்


கோவையில் ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி கராத்தே மாஸ்டரிடம் ரூ.21¼ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கராத்தே மாஸ்டர்

கோவை போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்தவர் சவுகத் (வயது 54). இவர் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தார். இதற்கு அதிகமாக பணம் தேவைப்பட்டது. இதையடுத்து தனது வீட்டை ரூ.3 கோடிக்கு அடமானம் வைத்து கடன் பெற முடிவு செய்தார். அப்போது அவருக்கு தென்காசியை சேர்ந்த நாகூர் மீரான் (57) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து நாகூர் மீரான் தனக்கு வங்கியில் தெரிந்த அதிகாரிகள் உள்ளனர். எனவே 5 சதவீத கமிஷன் தந்தால் வங்கியில் வீட்டை அடமானம் வைத்து ரூ.3 கோடி கடன் பெற்று தருவதாக தெரிவித்து உள்ளார். இதனை நம்பிய சவுகத் பல்வேறு தவணைகளாக நாகூர் மீரான் மற்றும் அவரது நண்பர் ஜான் ஆகியோரிடம் ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் வழங்கியதாக கூறப்படுகிறது.

மோசடி

இந்த நிலையில் பணத்தை பெற்றுக்கொண்ட நாகூர் மீரான் அவர் கூறியப்படி வங்கியில் கடனுதவி பெற்றுக்கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சவுகத், நாகூர் மீரானை தொடர்பு கொண்டு தனக்கு வங்கி கடன் பெற்றுத்தரும்படி கூறினார். ஆனால் அவர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து சவுகத் தென்காசி சென்று நாகூர் மீரானிடம் தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளர்.

ஆனால் நாகூர் மீரான் விரைவில் வங்கி மூலம் ரூ.3 கோடி கடன் பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார். ஆனால் அதன்பின்னரும் வங்கிகடன் பெற்றுத்தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சவுகத், நாகூர் மீரானை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. அதனால் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இதையடுத்து சவுகத் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story