மிளகு வாங்கி தம்பதியிடம் ரூ.23 லட்சம் மோசடி


மிளகு வாங்கி தம்பதியிடம் ரூ.23 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 5 Aug 2023 1:00 AM IST (Updated: 5 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தம்பதியிடம் 1½ டன் மிளகு வாங்கி ரூ.23 லட்சம் மோசடி செய்த தொழில் அதிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கோவை


சென்னை தம்பதியிடம் 1½ டன் மிளகு வாங்கி ரூ.23 லட்சம் மோசடி செய்த தொழில் அதிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


சென்னை தம்பதி


சென்னை சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயபாண்டியன். இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 44). இவர்கள் சென் னையில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புவனேஸ்வரி கோவை வெரைட்டிஹால் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-


என்னை கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோவை கரும்புக் கடை பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற கவுதமி செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் கோவை இடையர் வீதியில் மீரான், தாவூத், அஜ்மல்கான், கள்ளை ராஜன் ஆகியோருடன் இணைந்து டிரேடிங் கம்பெனி நடத்தி வருவதாக கூறினார்.


மேலும் கவுதமி என்னிடம் 4 டன் மிளகு அனுப்பி வைத்தால், பணத்தை விரைவில் தருவதாக தெரிவித்தார். அதை நம்பி நான் கேரளாவில் இருந்து 1.4 டன் மிளகு வாங்கி தனியார் பார்சல் சர்வீஸ் மூலம் அவர்கள் கூறிய கோவை முகவரிக்கு அனுப்பி வைத்தேன். அதற்குரிய ரூ.23 லட்சத்து 10 ஆயிரத்தை தந்து விட்டு மிளகை பெற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.


ஆனால் மிளகை பெற்றுக்கொண்டு அதற்குரிய பணத் தை தரவில்லை. மேலும் சில நாட்களில் பணத்தை தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் மாதங்கள் பல கடந்தும் அவர்கள் பணத்தை தரவில்லை. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தொழில் அதிபர் கைது


அதன் பேரில் கோவையை சேர்ந்த தொழில் அதிபர் அஜ்மல் கான், ஓட்டல் உரிமையாளர் கள்ளை ராஜன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெயஸ்ரீ என்ற கவுதமி, மீரான், தாவூத் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


1 More update

Next Story