வீடு விற்பனை செய்வதாக கூறி போலி ஆவணம் மூலம் ரூ.24½ லட்சம் மோசடி
திருப்பரங்குன்றம் அருகே வீடு விற்பனை செய்வதாக கூறி போலி ஆவணம் மூலம் ரூ.24½ லட்சம் மோசடி
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியில் வசித்து வருபவர் சரவணன். இவரது மனைவி மேனகா. இவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் நான் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் படப்படி தெருவில் ஒரு வீடு உள்ளது அதை விலைக்குவாங்கி கொள்கிறீர்களா? என்று சிலர் கேட்டனர். அதற்குநான் ஒப்புக்கொண்டேன். பின்னர் அவர்கள் போலி ஆவணம் மூலம் என்னிடம் ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு அவர்கள் எனக்கு வீட்டை பத்திரப்பதிவு செய்து தரவில்லை. நான் அவர்களிடம் இது தொடர்பாக கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.