பெண்ணிடம் ரூ.32 லட்சம் மோசடி; வாலிபர் மீது வழக்கு


பெண்ணிடம் ரூ.32 லட்சம் மோசடி; வாலிபர் மீது வழக்கு
x

வடமாநில பெண்ணிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்தததாக நெல்லையை சேர்ந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா பிரின்ஸ் அன்வர்ஷா ரோடு சுதாசினேகா அப்பார்ட்மென்டைச் சேர்ந்தவர் அவீஷ். இவருடைய மனைவி ரோஸ்மி (வயது 47). இவர் சிங்கப்பூரில் தொழில் செய்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த நோயல் திலகன் (37), ரோஸ்மிக்கு அறிமுகமானார்.

இந்தநிலையில் நோயல் திலகன் புதிதாக தொழில் தொடங்க போவதாக கூறி, ரோஸ்மியிடம் ரூ.32 லட்சம் வாங்கியதாகவும், பின்னர் ரோஸ்மியிடம் தெரிவிக்காமல் ேநாயல் திலகன் இந்தியாவிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரோஸ்மி, பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதில், என்னிடம் நோயல் திலகன் மோசடியாக பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story