வெளிநாட்டில் ஓட்டல் தொடங்குவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி

வெளிநாட்டில் ஓட்டல் தொடங்குவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி
கோவை
வெளிநாட்டில் ஓட்டல் தொடங்குவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.36 லட்சம் மோசடி
கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பழனிச்சாமி. இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 33). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சித்ரா ஸ்ரீ ராமசாமி, கருணீஸ்வரன் ஆகியோர் தாங்கள் வெளிநாடுகளில் கோவையில் உள்ள அன்னபூர்ணா ஓட்டலின் கிளைகளை தொடங்கப் போவதாக கூறினார்கள். இதற்கு தங்களுக்கு ரூ 36 லட்சம் தருமாறும், ஒரு வருடத்தில் அந்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் கூறினார்கள்.
இதை நம்பிய சதீஷ்குமார் வங்கி கணக்கில் அவர்களுக்கு ரூ.36 லட்சம் அனுப்பி வைத்தார். அவர்கள் கூறியபடி ஒட்டல் தொடங்கவில்லை. அந்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
2 பேர் மீது வழக்குப்பதிவு
இது குறித்து சதீஷ்குமார் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சித்ரா ஸ்ரீ ராமசாமி, கருணீஸ்வரன் ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






