வாலிபரிடம் ரூ.4 லட்சம் மோசடி

வணிக நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வணிக நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.4 லட்சம் மோசடி
கோவை மத்வராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 26). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த ஆண்டு கோவை ரேஸ்கோர்சில் செயல்பட்டு வந்த தனியார் ஆன்லைன் வணிக நிறுவனத்தினர் தகவல் ஒன்றை வெளியிட்டனர். இதில் அந்த நிறுவனத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், வரும் லாபத்தில் பங்கு தருவதாகவும், அதன்படி, தினசரி ரூ.1000 முதல் ரூ.1150 வரை சம்பாதிக்கலாம் என்றும் கூறி இருந்தனர்.
இதனை பார்த்த ஆனந்தகுமார் அந்த நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு கடந்த ஆண்டு ரூ.4 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் நிறுவனத்தினர் சொன்னபடி எந்த லாப தொகையையும் ஆனந்தகுமாருக்கு கொடுக்கவில்லை.
2 பேர் மீது வழக்கு
இதனையடுத்து ஆனந்தகுமார் நிறுவனத்தினரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து விசாரித்த போது ரூ.4 லட்சத்தை நிறுவனத்தினர் மோசடி செய்தது தெரியவந்தது.இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி தனியார் நிறுவன உரிமையாளர் ரவிக்குமார் மற்றும் ராமு ஆகியோர் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.