ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி


ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ரத்தினபுரியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

கணபதி

ரத்தினபுரியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஏலச்சீட்டு

கோவை ரத்தினபுரி சென்னியப்பன் வீதியை சேர்ந்தவர்கள் பாபு, செல்வி, ஆனந்தி. இவர்கள் 3 பேரும், அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து, பணம் செலுத்தி வந்தனர்.

இதற்கிடையில் தவணைகள் முடிவடைந்த பிறகும் அவர்களுக்கு சீட்டு தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

3 பேர் மீது வழக்கு

இதையடுத்து ஏலச்சீட்டில் சேர்ந்தவர்கள் பணத்தை திரும்ப வழங்குமாறு பாபு உள்பட 3 பேரிடமும் கேட்டனர். ஆனால் பலமுறை கேட்டும் பணத்தை திரும்ப வழங்கவில்லை என்று தெரிகிறது. அவர்களுக்கு சுமார் ரூ.40 லட்சம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்த மோசடி குறித்து ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பாபு உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story