போலி நகை கொடுத்து ஓட்டல் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி


போலி நகை கொடுத்து ஓட்டல் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி
x

தங்க புதையல் கிடைத்ததாக கூறி போலி நகை கொடுத்து ஓட்டல் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த வட மாநில கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

தங்க புதையல் கிடைத்ததாக கூறி போலி நகை கொடுத்து ஓட்டல் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த வட மாநில கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓட்டல் அதிபர்

திருப்பூர் மாவட்டம் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாலு (வயது 45). இவர் அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார்.

அவரது ஓட்டலுக்கு கடந்த 15-ந் தேதி வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சாப்பிட வந்தனர். அவர்கள் சாப் பிட்டு முடித்ததும் ஓட்டல் அதிபரிடம், நாங்கள் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர்.

பின்னர் அவர்கள், கோவை காந்திபுரத்தில் கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு மேம்பால கட்டுமானத்துக்காக கான்கிரீட் தூண் அமைக்க பள்ளம் தோண்டிய போது தங்க புதையல் கிடைத்ததா கவும், அதை குறைந்த விலைக்கு விற்க உள்ளதால் நீங்கள் விரும்பினால் வாங்கி கொள்ளலாம் என்று கூறி உள்ளனர்.

புதையல் நகை

மேலும் பாலுவை நம்ப வைப்பதற்காக புதையலாக கிடைத்த நகையின் ஒரு பகுதி என்று கூறி கொடுத்தனர். அதை வாங்கிய பாலு பரிசோதனை செய்து பார்த்த போது உண்மையான தங்கம் என்பது தெரிய வந்தது.

இதனால் அவர்கள் கூறிய தங்க நகைகளை மொத்தமாக தானே வாங்கி கொள்வதாக அந்த கும்பலிடம் கூறி உள்ளார். அதற்கு அவர்கள், மொத்த நகைகளையும் காந்திபுரத்தில் வைத்து உள் ளோம். நீங்கள் அங்கு வந்து பணத்தை கொடுத்து விட்டு நகைகளை வாங்கி செல்லுமாறு கூறி உள்ளனர்.

ரூ.5 லட்சம் கொடுத்தார்

இதையடுத்து அந்த கும்பல் கூறியபடி பாலு கடந்த 20-ந் தேதி காரில் கோவை காந்திபுரம் வந்து அந்த கும்பலை செல்போனில் தொடர்பு கொண்டார். அதற்கு அவர்கள் காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டல் முன் நிற்பதாகவும், அங்கு வந்து நகைகளை பெற்றுக் கொள்ளும்படியும் கூறியுள்ளனர்.

அதன்படி அங்கு பாலு சென்றார். அப்போது தயாராக நின்ற 3 பேரும், தங்களிடம் 1¾ கிலோ தங்க நகை உள்ளது. அதை ரூ.5 லட்சம் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளனர்.

உடனே பாலு ரூ.5 லட்சம் கொடுத்து நகைகளை வாங்கினார். பணத்தை வாங்கியதும் அவர்கள் 3 பேரும் வேகமாக சென்று விட்டனர்.

வலைவீச்சு

அதன்பிறகு பாலு தனது வீட்டிற்கு சென்று நகைகளை சோதித்து பார்த்தார். இதில் அந்த நகைகள் அனைத்து போலியானது என் பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வடமாநில கும்பலை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் என்று வந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்தி ரன் வழக்கு பதிவு செய்து வடமாநில கும்பலை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story