பெண் தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி
பெண் தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி
விருதுநகர் சூலக்கரையை சேர்ந்தவர் பாண்டி செல்வி (வயது 35). இவர் அப்பகுதியில் பெயிண்டு தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். இந்நிலையில் இடப்பற்றாக்குறை காரணமாக சூலக்கரை சிட்கோ தொழிற்பேட்டை சேர்ந்த விஜய் சங்கர் என்பவரின் கிட்டங்கியை குத்தகைக்கு கேட்டார். அதற்கு விஜய் சங்கர் ரூ.5 லட்சம் கேட்ட நிலையில் இதற்கான குத்தகை ஒப்பந்த பத்திரத்தை சூலக்கரை சேர்ந்த சுந்தர்ராஜ் தயாரித்த நிலையில் பாண்டிச்செல்வி விஜய் சங்கரிடம் ரூ.5 லட்சம் கொடுத்தார்.
இந்நிலையில் அந்த கிட்டங்கியில் அரசு வங்கியில் அடமானம் வைத்த நிலையில் வங்கி நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாண்டிச்செல்வி தனது பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்ட நிலையில் விஜய் சங்கர் 4 காசோலைகளை கொடுத்தார். ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் செலுத்தியபோது திரும்பி வந்துவிட்டது.
இதை தொடர்ந்து பாண்டிச்செல்வி, விஜய்சங்கரிடம் பணம் கேட்டபோது அவர் காலம் தாழ்த்தி வந்த நிலையில் இதுகுறித்து விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுபடி சூலக்கரை போலீசார், விஜய் சங்கர் மற்றும் சுந்தர்ராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.