செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி ரூ.6.18 லட்சம் மோசடி


செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி ரூ.6.18 லட்சம் மோசடி
x

ராதாபுரம் அருகே செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி ரூ.6 லட்சத்து 18 ஆயிரம் மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி

ராதாபுரம் அருகே செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி ரூ.6 லட்சத்து 18 ஆயிரம் மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி...

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா சீலாத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி, மர்மநபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். அப்போது அந்த மர்மநபர், இதற்காக நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும். தொடர்ந்து செல்போன் கோபுரம் அமைத்த பிறகு உங்களுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று கந்தசாமியிடம் கூறினார்.

இதனை உண்மை என்று நம்பிய கந்தசாமி, அந்த மர்மநபர் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ.6 லட்சம் 18 ஆயிரம் செலுத்தினார். பின்னர் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

ரூ.3.44 லட்சம் முடக்கம்

இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த கந்தசாமி, இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த மர்மநபரின் வங்கி கணக்கு வடமாநிலத்தில் உள்ள வங்கி கிளையில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வங்கி கணக்கில் இருந்த ரூ.3 லட்சத்து 44 ஆயிரத்தை முடக்கினர். மேலும் அந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story