என்ஜினீயரிடம் ரூ.7½ லட்சம் மோசடி


என்ஜினீயரிடம் ரூ.7½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 25 Oct 2023 12:30 AM IST (Updated: 25 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பிரசாரத்துக்கு ஜீப் வடிவமைத்து தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த ஒர்க் ஷாப் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்
பீளமேடு


தேர்தல் பிரசாரத்துக்கு ஜீப் வடிவமைத்து தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த ஒர்க் ஷாப் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.


என்ஜினீயர்


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அருண் மணி (வயது 45), என்ஜினீயர். இவருடைய நண்பர் ஆந்திராவில் உள்ளார். அவர் தனக்கு சொந்தமான ஜீப்பை அருண்மணியிடம் கொடுத்து தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றி வடிவமைத்து கொடுக்கும்படி கூறினார்

.இதையடுத்து அருண்மணி, அந்த ஜீப்பை கோவை கொண்டு வந்தார். பின்னர் அவர், பீளமேட்டில் இருக்கும் ஒர்க் ஷாப் உரிமையாளரான வடவள்ளியை சேர்ந்த கோபால் (43) என்பவரி டம் ஜீப்பை கொடுத்து தேர்தல் பிரசார வாகனமாக மாற்றி கொடுக்கும்படி கூறினார்.


ரூ.7½ லட்சம் மோசடி


அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும் என்று கூறிய கோபால், முதற்கட்டமாக ரூ.2½ லட்சம் கொடுக்கும்படி கூறினார். உடனே அருண்மணி அந்த பணத்தை கொடுத்தார். இது போல் பல தவணைகளாக அருண்மணியிடம், கோபால் ரூ.7½ லட்சம் வாங்கி னார். ஆனால் அவர், அந்த ஜீப்பை பிரசார வாகனமாக வடிவமைத்து கொடுக்கவில்லை.


இதையடுத்து அருண்மணி பீளமேடு சென்று கோபாலிடம் கேட்ட போது, விரைவில் பணிகளை முடித்து தருவதாக கூறி உள்ளார். ஆனால் 6 மாதம் ஆகியும் நீங்கள் எந்த வேலையும் செய்யவில்லை. எனவே நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்து விடுங்கள், நான் ஜீப்பை எடுத்துச் செல்கிறேன் என்று கூறி உள்ளார்.


ஒர்க் ஷாப் உரிமையாளர் கைது


இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோபால், அருண்மணிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அருண்மணி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒர்க் ஷாப் உரிமையாளர் கோபாலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Next Story