பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி


பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 21 Jun 2023 1:00 AM IST (Updated: 21 Jun 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பகுதிநேர வேலை தருவதாக கூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவையில் பகுதிநேர வேலை தருவதாக கூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பெண் என்ஜினீயர்

கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் சுவாதி (வயது 26). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வந்தது.

அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் சேர்ந்தால் குறைந்த அளவில் பணம் செலுத்தி அதிக லாபம் பெறலாம் என்றும், தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்களும் இருந்தன.

பகுதி நேர வேலை

உடனே சுவாதி, அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண் ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர், தினமும் நீங்கள் 3 மணி நேரம் செலவு செய்தால் அதிகள வில் பணம் சம்பாதிக்கலாம். சில ஓட்டல்கள் தொடர்பான புகைப்படங்களை உங்களுக்கு அனுப்பி வைப்போம்.

நீங்கள் அந்த ஓட்டல்கள் குறித்து மதிப்பாய்வு செய்து எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர், ஓட்டல்களை மதிப்பாய்வு செய்வது குறித்த மாதிரியையும் சுவாதிக்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து சுவாதி, அந்த பகுதி நேர வேலையை தான் செய்ய விரும்புவதாக கூறினார். உடனே அந்த நபர், அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

ரூ.7 லட்சம் மோசடி

அதன்படி சுவாதி, முதலில் சிறிய தொகையை அனுப்பினார். அதற்கு தகுந்த கமிஷன் கொடுக்கப்பட்டது. அதன்பிறகும் சுவாதி அனுப்பிய தொகைக்கு ஏற்ப கமிஷன் கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 5-ந் தேதி முதல் தற்போது வரை சுவாதி ரூ.7 லட்சம் அனுப்பினார். ஆனால் அந்த தொகைக்கு கமிஷன் கொடுக்கப்பட வில்லை.

இதனால் அவர் பலமுறை அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினார்.

ஆனால் அவருக்கு கமிஷன் தொகை திரும்ப கொடுக்கப்பட வில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்ட தை உணர்ந்த சுவாதி கொடுத்த புகாரின் பேரில் செல்போனில் பேசிய நபர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story