பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.68 லட்சம் மோசடி


பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.68 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.68 லட்சம் மோசடி செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை


திருப்பூர் மாவட்டம் சூசையாபுரத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது33). பட்டதாரி. இவர் அரசு வேலை தேடி வந்தார். அவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு கோவை நீலாம்பூர் அருகே உள்ள மயிலம்பட்டியை சேர்ந்த பரத்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.

அவர்கள் 2 பேரும் நவீன்குமாரிடம், தங்களுக்கு தெரிந்த அதிகாரி சுற்றுலாதுறையில் வேலை பார்ப்பதாகவும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினர். அதை உண்மை என நம்பிய நவீன்குமார், அவர்கள் 2 பேரிடமும் அரசு வேலைக்காக ரூ.7 லட்சத்து 68 ஆயிரம் கொடுத்தார்.

ஆனால் அவர்கள் கூறியபடி அரசு வேலை வாங்கித் தர வில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் பரத்குமார், ஹரிகிருஷ் ணன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கோவை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story