ஐ.டி.பெண் ஊழியரிடம் ரூ.8¾ லட்சம் மோசடி


ஐ.டி.பெண் ஊழியரிடம் ரூ.8¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஐ.டி.பெண் ஊழியரிடம் ரூ.8¾ லட்சம் மோசடி

கோயம்புத்தூர்

கோவை, ஏப்

கோவையில் ஐ.டி. பெண் ஊழியரிடம் ஆன்லைனில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி ரூ.8¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.டி.ஊழியர்

கோவை கள்ளிமடை பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 30). ஐ.டி. ஊழியர். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த குறுஞ்செய்தியில் இருந்த லிங்கை பிரியங்கா அழுத்தியதும், அவரது செல்போன் எண் டெலிகிராம் குரூப்பில் இணைந்தது.

இதையடுத்து பிரியங்காவை தொடர்பு கொண்டு பேசியநபர் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் பணிகளை முடித்தால் உடனுக்குடன் பணம் கிடைக்கும் என்றும், அதே நேரத்தில் பணம் செலுத்தியே இந்த பணிகளை பெற முடியும் என்றும் தெரிவித்தார். இது குறித்த முழு தகவல்களும் டெலிகிராம் குரூப் மூலம் தெரிவிக்கப்படும் என்றார்.

பண மோசடி

இதையடுத்து பிரியங்கா ரூ.8 ஆயிரம் செலுத்தி பணிகளை முடித்தார். பிரியங்கா ஆன்லைனில் பணிகளை முடித்ததும் ரூ.8 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.10 ஆயிரத்து 550 அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதையடுத்து பிரியங்காவிற்கு கூடுதல் பணம் செலுத்தினால் அதிக தொகை திரும்ப கிடைக்கும் என்று மர்ம நபர் பிரியங்காவிடம் தெரிவித்தார். இதையடுத்து பிரியங்கா பல்வேறு கட்டங்களாக ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் பணத்தை செலுத்தினார்.

ஆனால் அவரது வங்கி கணக்கிற்கு பணம் எதுவும் திரும்ப வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story