அரசு பஸ் கண்டக்டரிடம் ரூ.98 ஆயிரம் மோசடி


அரசு பஸ் கண்டக்டரிடம் ரூ.98 ஆயிரம் மோசடி
x

வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி அரசு பஸ் கண்டக்டரிடம் ரூ.98 ஆயிரம் மோசடி நடைபெற்றது.

ராமநாதபுரம்

பரமக்குடி ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 35). அரசு பஸ் கண்டக்டர். இவர் தனது மகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அதற்கான மருத்துவ சிகிச்சைக்கு பணம் கேட்டு அலைந்துள்ளார். அப்போது தனது முகநூலில் லோன் விளம்பரத்தை கண்ட ராஜ்மோகன் அதில் கேட்கப்பட்ட விபரங்களை பதிவு செய்துள்ளார். ஓரிருநாட்களில் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ரூ.5 லட்சம் மருத்துவ செலவிற்காக கடன் தருவதாகவும் உங்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், லோன் பெறுவதற்கான நடைமுறை கட்டணம் மற்றும் ஆவணங்கள் முதலியவற்றிற்கான முன்பணத்தினை செலுத்தினால் உடனடியாக கடன் தொகையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பி அவர் ரூ.98 ஆயிரத்து 307 பணத்தை 9 தவணைகளாக அனுப்பி உள்ளார். அதன்பின்னர் அவர்கள் பணம் தராமல் பணம் பறிப்பதை நோக்கமாக கொண்டிருப்பதை அறிந்த அவர் இது குறித்து ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story