வியாபாரியிடம் ரூ.16¼ லட்சம் மோசடி


வியாபாரியிடம் ரூ.16¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கனடா பல்கலைக்கழகத்தில் மகனுக்கு சீட் வாங்கித்தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.16¼ லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

கனடா பல்கலைக்கழகத்தில் மகனுக்கு சீட் வாங்கித்தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.16¼ லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கனடா பல்கலைக்கழகம்

கோவை வெள்ளலூர் திருவாதிரை கார்டனை சேர்ந்தவர் நாகராஜ் (வயது54). இரும்பு மொத்த வியாபாரி. இவர் தனது மகனை கனடாவில் உள்ள கேப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். அப்போது அவருக்கு சென்னையை சேர்ந்த இளங்குமரன் (40) என்பவர் அறிமுகமானார்.

அவர் தான் கனடா உள்பட பல நாடுகளில் படிப்பதற்கு சீட் வாங்கி கொடுத்து உள்ளதாகவும், உங்களது மகனை கனடாவில் உள்ள கேப் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு சீட் பெற்று தருவதாக கூறினார். அதற்கு பணம் செலவாகும் என்று தெரிவித்து இருந்தார்.

ரூ.16¼ லட்சம் மோசடி

அதை உண்மை என நம்பிய நாகராஜ் தனது மகனுக்கு கனடாவில் படிக்க சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ரூ.16 லட்சத்து 43 ஆயிரத்து 933-ஐ இளங்குமரனின் வங்கி கணக்கில் செலுத்தினார்.

ஆனால் அவர் சொன்னபடி பல்கலைக்கழகத்தில் படிக்க சீட் வாங்கி கொடுக்கவில்லை. அதோடு பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகராஜ், சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் இளங்குமரன் மீது நம்பிக்கை மோசடி, மோசடி ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு தொடர்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story