நெல்லிக்குப்பம் அருகே மின்துறை ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி


நெல்லிக்குப்பம் அருகே மின்துறை ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி
x

நெல்லிக்குப்பம் அருகே மின்துறை ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த பெண் அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம் அருகே பெரியசோழவள்ளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் கோடீஸ்வர ஆனந்த் (வயது 40). இவர் நத்தப்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் உதவி வணிக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் மின்வாரிய அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் மகாலட்சுமி (51) என்பவர் தனது மகள் திருமணத்திற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு கோடீஸ்வர ஆனந்த் இல்லை என்று கூறி உள்ளார். அதற்கு உங்களுடைய சம்பள வங்கி கணக்கில் கடன் வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதன்படி கோடீஸ்வர ஆனந்த் ரூ.4 லட்சத்தை எடுத்து கொடுத்துள்ளர். ஆனால் பணத்தை வாங்கிய அவர் அதை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். சம்பவத்தன்று அவர் பணத்தை கேட்ட போது, அவரை மகாலட்சுமி ஆபாசமாக பேசி பணத்தை தர முடியாது என்று மிரட்டி மோசடி செய்ததாக தெரிகிறது. இது பற்றி கோடீஸ்வர ஆனந்த் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மகாலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story