எடப்பாடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி போலீசார் விசாரணை


எடப்பாடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி  தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி  போலீசார் விசாரணை
x

எடப்பாடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சேலம்,

தனியார் நிறுவன ஊழியர்

சேலம் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஜெகநாதன். இவருடைய மகன் சதீஷ் (வயது 39). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு கொங்கணாபுரத்தை சேர்ந்த சண்முகம் (58) என்பவர் ஜெகநாதன் மூலம் அவருடைய மகனுக்கு அறிமுகமானார். அப்போது மீன்வளத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை சண்முகம் பெற்று கொண்டார்.

ஆனால் இதுவரை அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுதொடர்பாக சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜியிடம் சதீஷ் புகார் கொடுத்தார்.

வழக்குப்பதிவு

அதன்பேரில் சண்முகத்தை அழைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம், சதீசுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்துவிட்டதாகவும், மீதமுள்ள ரூ.4 லட்சத்தை 10 நாட்களில் கொடுத்துவிடுவதாகவும் சண்முகம் தெரிவித்தார். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் சதீசுக்கு பணம் அவர் கொடுக்கவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது தரமுடியாது என்று கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் சதீஷ் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த சண்முகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story