ரூ.65 ஆயிரம் மோசடி; வாலிபர் கைது


ரூ.65 ஆயிரம் மோசடி; வாலிபர் கைது
x

நெல்லை அருகே ரூ.65 ஆயிரம் மோசடி செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை தேவர்குளம் அருகே மேல இலந்தகுளத்தைச் சேர்ந்தவர் மோகன் குணசீலன் (வயது 27). இவர் தனியார் காற்றாலை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். பாப்பாக்குடியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (25). இவர் வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் தற்காலிக பணியாளராக வேலை செய்தார். இவர், வங்கியில் இருந்து பேசுவதாக மோகன் குணசீலனை தொடர்பு கொண்டு இலவசமாக கிரெடிட் கார்டை வாங்கி தருகிறேன் என்று கூறி, அதனை பெற்று கொடுத்தார். பின்னர் கிரெடிட் கார்டை ஆபரேட் செய்ய வேண்டும் என்று கூறி, மோகன் குணசீலனின் ஓ.டி.பி. எண்ணை அறிந்து கொண்டு அவரது சேமிப்பு கணக்கில் இருந்த ரூ.48 ஆயிரத்தை ஏமாற்றி எடுத்துள்ளார்.

இதுகுறித்து மோகன் குணசீலன் தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மோகன் குணசீலனின் கிரெடிட் கார்டில் இருந்து ராமசுப்பிரமணியன் பணத்தை ஏமாற்றி எடுத்தது தெரியவந்தது. அதேபோல் கட்டாலங்குளத்தை சேர்ந்த அருள்தாசனிடம் இருந்து ரூ.17 ஆயிரத்தை ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து ராமசுப்பிரமணியனை போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story