விழுப்புரத்தில்நகை செய்து தருவதாக கூறி விவசாயியிடம் மோசடி


விழுப்புரத்தில்நகை செய்து தருவதாக கூறி விவசாயியிடம் மோசடி
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:47 PM GMT)

விழுப்புரத்தில் நகை செய்து தருவதாக கூறி விவசாயியிடம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே உள்ள செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 61), விவசாயி. இவர் கடந்த 5.11.2022 அன்று 5 பவுன் தாலி சங்கிலி மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு விழுப்புரம் காமராஜர் தெருவில் உள்ள ஒரு நகை அடகு கடைக்கு சென்றார். பின்னர் அங்குள்ள கடையில் இருந்த அதே பகுதியை சேர்ந்த சோகாராம், அவரது சகோதரர்கள் சுக்காராம், சம்பா ஆகியோரிடம், நாகப்பன் அந்த நகை மற்றும் பணத்தை கொடுத்து புதிதாக வேறு நகை செய்து தருமாறு கூறியுள்ளார். 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை பெற்ற சோகாராம் உள்ளிட்ட 3 பேரும் இதுநாள் வரையிலும் நாகப்பனுக்கு வேறு நகை ஏதும் செய்து தரவில்லை.

3 பேர் மீது வழக்கு

இதையடுத்து நாகப்பன், அந்த கடைக்கு பலமுறை சென்று நகை செய்து தருமாறும், இல்லையெனில் தான் கொடுத்த நகை, பணத்தை திருப்பித்தருமாறும் வற்புறுத்தி கேட்டபோதிலும் அவர்கள் 3 பேரும் நகை, பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நாகப்பன், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சோகாராம் உள்ளிட்ட 3 பேர் மீதும் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story