நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித்தருவதாக மோசடி; மேலும் ஒருவர் கைது


நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித்தருவதாக மோசடி; மேலும் ஒருவர் கைது
x

மயிலாடுதுறையில், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை
சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி தனிநபர் கடன் வாங்கித்தருவதாக கூறி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக மயிலாடுதுறை கூறைநாட்டை சேர்ந்த சண்முகவேல் மகன் மணிகண்டன் என்பவர் மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவனத்தின் பெயரை சொல்லி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெண்ணங்குழியை சேர்ந்த சஞ்சய், சித்தார்த்தன், காட்டுமன்னார்குடியை சேர்ந்த சையது அப்துல்லா ஆகிய 3 பேரை ஏற்கனவே கைது செய்தனர்.

மேலும் ஒருவர் கைது

இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் சிலரை கைது செய்ய மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சிங்காரவேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்டதாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெண்ணங்குழியைச் சேர்ந்த அன்பரசு மகன் அமர்நாத்(வயது 29) என்பவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதானவரிடம் இருந்து ரூ.5 லட்சம், 15 செல்போன்கள், சிம்கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த மோசடி தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.



Next Story