தர்மபுரியில் இலவச மருத்துவ முகாமிற்கு வந்த 3 பெண்களை தெருநாய் கடித்ததால் பரபரப்பு
தர்மபுரி
தர்மபுரி 4 ரோடு அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கண் பரிசோதனை செய்து கொள்வதற்காக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர். இவர்கள் அந்த பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த ஒரு தெருநாய் திடீரென வரிசையில் நின்ற 3 பெண்களை கடித்தது. மேலும் அங்கு நின்றவர்களையும் தெருநாய் துரத்தியது. இதனால் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த தெருநாயை விரட்டினர். இதைத்தொடர்ந்து ெருநாய் கடித்த பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல் சந்தைப்பேட்டை பகுதியில் நேற்று அதிகாலை 2 பேரை தெருநாய் கடித்தது. இதனால் சாலைகளில் சென்று வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தெரு நாய்களை பிடித்து ஊசி போட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவ முகாமிற்கு வந்த 3 பெண்களை தெருநாய் கடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.