452 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்


452 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
x
தினத்தந்தி 24 Aug 2022 1:00 AM IST (Updated: 24 Aug 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:-

கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் 370 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் துரை அரசு தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சென்னபசப்பா ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உமா, சாஹினா, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போடிச்சிப்பள்ளி அரசு மாதிரி பள்ளியில் 82 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சக்திவேல் தலைமை தாங்கினார். டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வழங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் மும்தாஜ், சையத்அசேன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story