790 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
790 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
திருவாரூர்
மன்னார்குடி அரசு உதவிபெறும் தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயிலும் 790 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி..ராஜா கலந்து கொண்டு 790 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் தலையாமங்கலம் பாலு, நகரசபை தலைவர் மன்னை சோழராஜன், நகர தி.மு.க. செயலர் வீரா கணேசன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் முதல்வர் ஜெபமாலை வரவேற்றார். முடிவில் ஆசிரியர் அறவாழி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story