907 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
சீர்காழியில் 907 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்
சீர்காழி:
சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கல்வித்துறை அதிகாரி பரமசிவம், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி வரவேற்றார். விழாவில் சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி, திருவெண்காடு, கோதண்டபுரம், ஆயங்குடிபள்ளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆறு பள்ளிகளை சேர்ந்த 907 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.. இந்த விழாவில் நகர மன்ற உறுப்பினர் நித்யா தேவி பாலமுருகன், கொள்ளிடம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகி ராஜ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.