அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமை தாங்கினார் கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு, 369 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினர். இந்நிகழ்ச்சியில் தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர்கள் தர்மராஜ், ராஜேஸ்வரி, மேரி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கரத்தினம், நகர காங்கிரஸ் தலைவர் சிங்ககுட்டி, பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆனந்தசெல்வி நன்றி கூறினார்.