பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
பாளையங்கோட்டையில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
பாளையங்கோட்டையில் இந்து சமய அறநிலை துறையின் கீழ் இயங்கி வரும் ஸ்ரீகாந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 கல்வி ஆண்டில் பிளஸ்-1 படிக்கும் 78 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நெல்லை மாவட்ட அறங்காவலர் நியமன குழுத்தலைவர் முருகன் தலைமை தாங்கி, இலவச சைக்கிள்களை வழங்கினார்.
இதில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வெயிலப்பன், முரளி, மதியழகன், பிரியா, பள்ளியின் செயலாளரும், இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையருமான கவிதா, பள்ளி தலைமை ஆசிரியை வத்சலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story