பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
தர்மபுரி
பென்னாகரம்:-
பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் லோகநாதன் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் முனியப்பன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர்கள் சுரேஷ், லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 160 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பா.ம.க. மாவட்ட தலைவர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், இளைஞர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, நகர தலைவர் சந்தோஷ், நாட்டு நல பணி திட்ட ஆசிரியர் சரவணன், தேசிய மாணவர் படை ஆசிரியர் பைரோஸ் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story