பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
சிவகிரி அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
தென்காசி
சிவகிரி:
சிவகிரி அருகே வாசுதேவநல்லூர் யூனியன் ராமநாதபுரம் நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி, வாசுதேவநல்லூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், கிளை செயலாளர் மகேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர், உள்ளார் மணிகண்டன், விக்கி, நாடார் பள்ளி உறவின்முறை கமிட்டி தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், மற்றும் மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story