பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்


பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
x

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் ஜீவன் ஜேக்கப் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story