பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.
தூத்துக்குடி
ஏரல்:
ஏரல் அருகே உள்ள வாழவல்லான் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, 61 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியசீலி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தனசிங், கல்வி வளர்ச்சி குழு தலைவர் சேர்மதுரை, ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பாரத், ஏரல் தி.மு.க. பேரூர் செயலாளர் ராயப்பன், மற்றும் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உமரிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 72 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிளை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் பன்னீர் செல்வி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோட்டாளம், உமரிக்காடு பஞ்சாயத்து துணைத் தலைவர் பாஸ்கர், ஊர் பிரமுகர்கள் மோகன், அய்யம்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story