மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்


மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
x

மல்லாங்கிணறு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சா் தங்கம் தென்னரசு வழங்கினார்.

விருதுநகர்

காரியாபட்டி,

மல்லாங்கிணறு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சா் தங்கம் தென்னரசு வழங்கினார்.

விலையில்லா சைக்கிள்

மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு 292 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராமப்புறங்களில் ஏழ்மையில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய பிள்ளைகளை பல்வேறு குடும்ப சூழ்நிலையின் காரணமாக 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்டு மேல்நிலைக்கல்வி தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

தடை இருக்கக்கூடாது

அனைத்து தரப்பு மாணவர்களும் மேல்நிலைக்கல்வியை தடையில்லாமல் கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு விலையில்லா சைக்கிள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 2023-2024-ம் நிதியாண்டில் 7,699 மாணவர்களுக்கும், 9,982 மாணவிகளுக்கும் என மொத்த 17,681 சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

இதன் முதல் கட்டமாக மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 161 மாணவர்களுக்கும், செந்திக்குமார நாடார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 131 மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (பொ) முத்துகழுவன், பேரூராட்சி தலைவர்கள் துளசிதாஸ், செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மல்லாங்கிணறு பேரூராட்சி துணைத்தலைவர் மிக்கேல் அம்மாள், பேரூராட்சி கவுன்சிலர் வக்கீல் பாலச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் குருசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பர பாரதி, சேகர், ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story